சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் காரணமாக செலவுகளை குறைக்கும் மக்கள் பணவீக்கம் காரணமாக சுவிட்சர்லாந்தில் நுகர்வோர் தமது செலவினங்களை குறைத்துள்ளனர்.
மற்ற இடங்களை விட சுவிட்சர்லாந்தில் பணவீக்க விகிதம் குறைவாக இருந்தாலும், அது சுவிட்சர்லாந்தின் நுகர்வோர் தங்கள் பணத்தை செலவழிக்கும் விதத்தை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலாய்ட் கன்சல்டிங் சர்வீஸ் நடத்திய புதிய சர்வேயில் இருந்து இது தெரியவந்துள்ளது. உதாரணமாக, கடந்த 12 மாதங்களில், கேள்விக்குட்படுத்தப்பட்டவர்களில் 52 சதவீதம் பேர் முன்பை விட குறைவாகவே சாப்பிட வெளியே சென்றதாகக் கூறியுள்ளனர்.