சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, முட்டைக்கான தேவை கணிசமாகவும் எதிர்பாராத விதமாகவும் அதிகரித்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் முட்டைகளுக்காக தட்டுப்பாடு நிலவலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. முட்டையின் வகையைப் பொறுத்து, தேவை ஐந்து சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று SRF செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ஸ்டாப்பர் உறுதிப்படுத்தினார்.
மேலும் முட்டை பற்றாக்குறை தடுப்பதற்கு முக்கிய விநியோகஸ்தர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏனெனில் சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தால் முட்டை உற்பத்தியை குறுகிய காலத்தில் தேவைக்கேற்ப அதிகரிக்க முடியாது. இதை அடைவதற்கு, அதிகமான உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.