சுவிட்சர்லாந்தில் சம்பளத்தை விடவும் உளச் சுகாதாரத்திற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரென்ட்ஸ்டான்ட் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தொழில்களில் ஈடுபடும் போது உளச் சுகாதாரத்திற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென பெரும்பாலான பணியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 91 வீதமானவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
தொழில்களின் போது சம்பளத்திற்கு முன்னுரிமை வழங்குவோரின் எண்ணிக்கை 89 வீதமாக காணப்படுகின்றது.
இதன்படி, சம்பளத்தை விடவும் சுவிஸ் மக்கள் உளச் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.