சுவிஸில் பொழுதுபோக்கு செயற்பாடுகளின் போது நிகழும் விபத்துகளில் வருடாந்தம் 40 ஆயிரம் பேர் காயமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் விபத்து தடுப்பு ஆலோசனை நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பொழுதுபோக்கு செயற்பாடுகளில் ஈடுபடும் போது ஈடுபடும் போது ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை இந்த அமைப்பு வழங்கி வருகின்றது.
இவ்வாறான விபத்துகளின் போது பாரிய அளவில் செலவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் சுமார் 12 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ்வாறான விபத்துக்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சுமார் 8 மில்லியன் மனித மணித்தியால உழைப்பினை இழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சில விபத்துக்கள் மூலமாக பாரிய ஆபத்துக்களும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு செயற்பாடுகளில் ஈடுபடும் போது ஏற்படக்கூடிய விபத்துக்கள் தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை எனவும், இது தொடர்பாக சுவிஸ் மக்கள் மத்தியில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.