சூரிச் Langstrasse இல் இடம்பெற்ற தீ விபத்து.!! 7 பேர் பாதிப்பு.! வெள்ளிக்கிழமை காலை நடந்த ஒரு சம்பவத்தில், லங்திராசாவில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
அவசர அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் உயிர்சேதம் இன்றி நிலமையை சமாளிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டுள்ளதுடன் ஐந்து நபர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும், மேலும் இருவர் பக்கத்து பால்கனியில் தஞ்சம் புகுந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Credits : Schutz & Rettung Zürich
தீயணைப்புபடை நீண்ட போராட்டத்திற்கும் மத்தியில் மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஐந்து பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
உடனடியாக அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் குழு, மூவர் எரிவாயு, புகை காரணமாக பாதிக்கப்பட்டிப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் யாரும் மரண ஆபத்தில் இல்லை என்பதோடு, தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் சூரிச் கன்டோனல் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.