அலங்கரிக்கப்படும் வாகனங்கள் தொடர்பில் சுவிஸ் போலீசார் எச்சரிக்கை சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் நத்தர் பண்டிகையை முன்னிட்டு வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வாகனங்கள் நத்தார் அலங்காரத்துடன் வீதியில் சஞ்சரிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் வாகனங்களை அலங்கரித்து சிலர் தங்களது வாகனங்கள் பற்றிய காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.
bauernzeitung : (Bild: Peter Fankhauser)
இவ்வாறு வாகனங்களை அதிக அளவில் அல்லது மித மிஞ்சிய அளவில் அலங்கரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் அதிகளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை செலுத்துவது ஏனைய சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மின்குமிழ்களை அதிகளவில் ஒளிர விடுவதனால் ஏனைய சாரதிகள் கவனம் சிதறும் எனவும் இவை விபத்துகளுக்கு வழி அமைக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.