குடிபோதை விபத்துக்களில் முன்னிலையில் ஜெனீவா மாகாணம் கடந்த ஆறு ஆண்டுகளாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பெரும்பாலான கார் விபத்துகளுக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் மாகாணம் ஒன்று இடம்பிடித்துள்ளது.
Touring Club Suisse (TCS) இன் புதிய தரவுப்படி , ஜெனீவாவில் சராசரியாக 10,000 மக்களுக்கு 1.04 வீதமானவர்கள் மதுபோதையால் தீவிரமான விபத்துக்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில் 10,000 மக்களுக்கு 0.95 வீத விபத்துக்களும், அதைத் தொடர்ந்து நிட்வால்டன் மாகாணம் 0.91 வீத விபத்துக்களும், டிசினோமாகாணம் 0.80 வீத விபத்துக்களும், மற்றும் ஒப்வால்டன் மாகாணம் 0.78 வீத விபத்துக்களும் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Schaffhausen இல், 2021 உடன் ஒப்பிடுகையில் விகிதம் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. மற்றும் டிசினோவில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.