மாக்கியா ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட 52 வயது சுவிஸ் நபர் – போலீசார் விசாரணை தொடருகிறது
சுவிட்சர்லாந்தின் டெசின்(Tessin) மாநிலத்தில் உள்ள Pozzo di Tegna என்ற பிரபலமான ஆற்று நீச்சல் இடத்தில், 52 வயதான சுவிஸ் நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15, 2025) காலை மரணமடைந்த நிலையில் நீரில் மிதந்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் காலை 7.30 மணி அளவில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர், அவரை நீரில் இருந்து மீட்டனர். ஆனால், மரணம் ஏற்கனவே ஏற்பட்டிருந்ததால் உயிர் காப்பாற்ற முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர் லொகார்னோ (Locarno) பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவரது மரணத்தில் மூன்றாம் நபர்களின் தொடர்பு இல்லை என்பது தற்போது வரை போலீசாரின் ஆரம்ப தகவல் ஆகும். ஆனால் மரணத்தின் காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேவேளை, Pozzo di Tegna என்பது மாஜ்யா ஆற்றின் ஓரத்தில் அமைந்த ஒரு இயற்கையான நீச்சல் இடம். இங்கு தெளிந்த, குளிர்ந்த நீர், மணல் மற்றும் பாறை கரைகள், மற்றும் பாறைத் தாவலுக்கு ஏற்ற இடங்கள் உள்ளதால், இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் டைவர்களுக்கு பிரபலமான இடமாக உள்ளது.
தற்போது, இந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக Pozzo di Tegna பகுதிக்கு பொது நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டு, போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
@ (sda)