சூரிச்சில் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 20000 சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான களவாடப்பட்ட கைக்கடிகாரமும் மீட்கப்பட்டுள்ளன.
35 வயதான சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவரிடமிருந்து இந்த ஐந்து பேரும் கைக்கடிகாரத்தை களவாடியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 22 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சுவிட்சர்லாந்து பிரஜைகள் எனவும், ஒருவர் ஆப்கான் பெண் எனவும் மற்றையவர் ஒஸ்திரிய பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சூரிச் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.