சுவிட்சர்லாந்தின் (வோல்ஹூசனில்) Wolhusen பகுதியில், 2025 டிசம்பர் 11 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை, ஒரு கேரேஜ் நிறுவனத்தில் நடந்த உடைப்பு திருட்டில் ஐந்து சக்திவாய்ந்த சொகுசு கார்கள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொலிசார் வெளியிட்ட தகவலின்படி, அதிகாலை 1.15 மணியளவில் கேரேஜுக்குள் நுழைந்த மர்மநபர்கள், நான்கு BMW கார்கள் மற்றும் ஒரு Audi காரை திருடியுள்ளனர். அதோடு, கேரேஜ் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்த பல வாகன இலக்கத் தகடுகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திருடப்பட்ட வாகனங்களில் இரண்டு, காலை 6.30 மணியளவில் Röschenz பகுதியில் தனிப்பட்ட விபத்துகளில் சிக்கியுள்ளன. விபத்துக்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற இரு நபர்களை Basel-Landschaft கன்டோன் பொலிசார் கைது செய்தனர்.

அதே நாளில் காலை 9 மணியளவில், Feldbrunnen பகுதியில், பொலிசாரைத் தவிர்த்து ஓடிய மற்றொரு திருடப்பட்ட BMW கார் விபத்தில் சிக்கியது. வாகனத்தை விட்டு தப்பிய ஓட்டுநரை, சொலுத்தூர்ன் கன்டோன் பொலிசார் குறுகிய நேரத்தில் கைது செய்தனர்.
இதற்கிடையில், பிற்பகலில் Langenbruck பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு BMW கார் கண்டுபிடிக்கப்பட்டு, பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது வோல்ஹூசன் உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடையது என்பது உறுதியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 19, 20 மற்றும் 27 வயதுடைய மூன்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை Sursee அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.
© Kapo ZH