சூரிச்சில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடைகளில் இந்த நபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து பல்லாயிரக் கணக்கான சுவிஸ் பிராங்க் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலத்திரனியல் சாதனங்கள், உணவுப் பொருட்கள், மதுபான வகைகள், ஆடைகள், பானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
ரொமானியாவைச் சேர்ந்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.