சூரிச் ஸ்ட்ரீட் பேரேட் விழாவில் சட்டத்தை மீறிய 34 பேர் கைது
32வது ஸ்ட்ரீட் பேரேட் விழா சூரிக் ஏரிக்கரையில், சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நேரத்திற்கு துவங்கியது. பல வண்ண அலங்காரங்களுடன் வந்த “லவ்மொபைல்கள்” நகரின் பிரதான பாதையில் இசையுடன் நகரத் துவங்கின. குறித்த நிகழ்வில் பல அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர். பிற்பகல் நேரத்தில், க்வாய் பாலம், ஷான்செங்கிராபன் மற்றும் லிம்மட் நதி சுற்றுவட்டாரத்தில் நீந்திக் கொண்டிருந்த பலரை போலீசார் நீரில் இருந்து வெளியேறச் செய்தனர். சில படகு ஓட்டிகள் நீர்வழிப் போக்குவரத்து விதிகளை மீறியதால், அவர்களையும் அங்கிருந்து அகற்றினர்.
Street parade
மாலை 4.30 மணிக்குப் பிறகு, பெல்வ்யூ அருகே அவசர நிலைக்கு உள்ளான ஒரு பெண் நீச்சலில் இருந்து மீட்கப்பட்டார். இரவு 9 மணி வரை, சூரிக் நகரப் போலீசார் மொத்தம் 28 பேரை கைது செய்தனர். இதில் பெரும்பாலோர் திருட்டு மற்றும் போதைப்பொருள் சட்ட மீறலுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.
மேலும், க்வாய் பாலம் வழியாக ஆயுதம் ஏந்தியபடி ஒருவர் சென்றதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் போலீஸ் நடவடிக்கையை ஏற்படுத்தியது. குறித்த நபர் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் எடுத்துச் சென்றிருந்த “ஆயுதம்” உண்மையில் ஒரு Pepperpistole என்பது பின்னர் தெரியவந்தது.
அதிக அளவு மது மற்றும்/அல்லது போதைப்பொருள் உபயோகத்தால் தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்து விளைவிக்கும் நிலையில் இருந்த ஐந்து பேரை, சூரிக்கில் உள்ள மருத்துவ மற்றும் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.