இத்தாலிக்கு சுற்றுலா சென்ற 12 வயது சுவிட்சர்லாந்து சிறுமி மரணம்
இத்தாலியின் கலாப்ரியா மாநில தலைநகரான காடன்சாரோவில் உள்ள மருத்துவமனையில், ஜூலை 26, 2025 அன்று 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காடன்சாரோ வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
அமரோனியைச் சேர்ந்த இந்த சிறுமி, கோடை விடுமுறையை கலாப்ரியாவில் கழிக்க சுவிட்சர்லாந்தில் இருந்து பெற்றோருடன் திரும்பியிருந்தார். சனிக்கிழமை (ஜூலை 26) இரவு, கேளிக்கை விடுதியில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

பெற்றோர் உடனடியாக அவரை சோவெராடோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, சிறுமியை காடன்சாரோ மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியிருந்தது. ஆனால், மைடாவில் இருந்து வந்த ஒரே ஆம்புலன்ஸ் வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, பெற்றோர் தங்கள் செலவில் தனியார் ஆம்புலன்ஸை அழைக்க பலமுறை வலியுறுத்தியும், மைடாவில் இருந்து வரும் ஆம்புலன்ஸை காத்திருக்க வேண்டும் என்று பதிலளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. காடன்சாரோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.