ஹெலிகாப்டர் மூலம் கொள்ளையர்களை துரத்திய சூரிச் போலீசார்! செவ்வாய்கிழமை மாலை, சூரிச் போலீசாரின் ஒரு த்திரில்லிங் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது. Zollikon இல் அமைந்துள்ள வசதியான சமூகத்தில் உள்ள ஒரு வீட்டில் அலாரம் ஒலித்தது.
மேலும் இது பற்றிய எச்சரிக்கை செய்தி சூரிச் கன்டோனல் காவல்துறைக்கு விரைவாக சென்றடைந்தன. குறித்த வீட்டில் இருந்து மூன்று சந்தேக நபர்கள் வாகனத்தில் தப்பிச்சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் வாகனம் பற்றிய முழுவிபரங்களையும் சாட்சிகள் போலீசாருக்கு தெரிவித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து போலீசார் சந்தேக நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் இது சாதாரண தேடுதல் அல்ல – ரோந்து கார்களுடன், சந்தேக நபர்களை மேலே இருந்து கண்காணிக்க சூரிச்சின் போலீஸ் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.

ஹெலிகாப்டர் மூலமும் ரோந்து படைகள் மூலமும் வலைவீசி தேடப்பட்டதில் மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்டவர் இத்தாலிய மற்றும் குரோஷிய குடியுரிமை பெற்ற 29 வயது நபர் என தெரியவந்துள்ளது. அருகிலுள்ள மற்றொரு நகரமான (மைலென்) Meilen இல் உள்ளூர் காவல்துறையினரால் பிடிபட்டார். எவ்வாறாயினும், மீதமுள்ள இரண்டு சந்தேக நபர்களை பிடிப்பதற்காக மேலும் தேடுதல் தொடர்கிறது.
ஹெலிகாப்டர் பயன்பாடு உள்ளிட்ட விரிவான போலீஸ் நடவடிக்கை சிலரை ஆச்சரியப்படவைத்துள்ளது. சூரிச் ஏரியை ஒட்டி அமைந்துள்ள Zollikon அதன் அழகு மற்றும் வரிச் சலுகைகளால் பிரபலங்கள் மற்றும் பிற வசதி படைத்த நபர்கள் வசிக்கும் பணக்காரப் பகுதியாக அறியப்படுகிறது.
இலக்கு வைக்கப்பட்ட வீடு ஒரு உயர்மட்ட நபருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று சிலர் ஊகிக்க இது வழிவகுத்தது. இருப்பினும், சூரிச்சின் கன்டோனல் காவல்துறை தந்திரோபாய காரணங்களை மேற்கோள் காட்டி இந்த விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளமை குறி;ப்பிடத்தக்கது.
Nau