ஹாலோவீன் தினத்தில் முகமூடி அணிந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை வியாழன் மாலை மற்றும் வெள்ளிக்கிழமை காலை இடையே, ஹாலோவீன் தொடர்பான நிகழ்வுகள் காரணமாக இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் வின்டர்தூர் நகரகாவல்துறை பலமுறை அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹாலோவீன் இரவில், பல்வேறு ‘ஹாலோவீன் சம்பவங்கள்’ காரணமாக வின்டர்தூர் நகர காவல்துறை மொத்தம் பத்து முறை அழைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று சம்பவங்கள் பைரோடெக்னிக்குகளை பயன்படுத்தியதிலும் ஆறு நிகழ்வுகளில் வாகனங்களுக்கு எதிராக முட்டைகள் வீசப்பட்டமையும் பதிவாகியுள்ளது.
மேலும் Theodor-Kirchner-Strasse (தியோடர்-கிர்ச்னர்-ஸ்ட்ராஸ்ஸிலும்) ஒரு கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. அதில் ஒரு நபர் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி மூன்று குற்றவாளிகள் கொள்ளையடித்ததாகக் கூறினார். அவர்களில் இருவர் முகமூடி அணிந்திருந்தனர எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத குற்றவாளிகள் சுமார் 100 பிராங்குகளை திருடிச் சென்றனர் . இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் வின்டர்தூர் நகர போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.