ஷாஃப்ஹவுசென் மாகாணத்தில் நான்கு தொழிலாளர்கள் 92 வயதான ஒரு பெண்ணிடம் 100,000 பிராங்குகளுக்கு மேல் அவரது வீட்டைப் பழுதுபார்ப்பதற்காகக் கட்டணம் வசூலித்து மோசடி துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் பெண்ணின் வீட்டில் இருந்து பெருமளவிலான நகைகளை திருயுள்ளதாகவும் குற்றம் சுமந்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
18 மற்றும் 40 வயதுடைய ஆண்கள், சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்டெட்டனில் உள்ள அவரது வீட்டில் வீட்டின் முன்பகுதியை சரிசெய்யவோ அல்லது தோட்ட வேலியை சரி செய்யவோ முன்வந்தனர்.
பல வாரங்களாக, அவர்கள் பல்வேறு வேலைகளை மேற்கொண்டனர். மற்றும் வயதான பெண்மணியால் பணமாக ஊதியம் பெற்றனர்.

யாரோ ஒருவர் சந்தேகமடைந்து இவர்கள் பெண்மணியை ஏமாற்றுவதாக போலீஸாருக்குப் போன் செய்ததையடுத்து, தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தொழிலாளர்களின் காரில் சிறிதளவு கொகைன் போதைப்பொருள் மற்றும் புழுக்கள் அடங்கிய பையை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்தப் புழுக்கள் இருப்பதாக போலியாக காட்டி திருத்த வேலைகளை செய்து பணம் வசூலிப்பதற்காக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளர்.
மேலும், தொழிலாளர்கள் வீட்டில் இருந்த போது பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்புள்ள நகைகள் காணாமல் போயுள்ளதுடன், அவர்களும் திருட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பலமாக சந்தேகிக்கப்படுகிறது.
;இது போன்ற போலி வேலையாட்கள் மற்றும் துப்பரவு தொழிலாளர்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலீசார் எச்ரித்துள்ளமை குறி;பிடத்தக்கது.