ஷாஃப்ஹவுசன் பகுதியில் கத்தியை காட்டிய மிரட்டிய நபர் கைது கடந்த செவ்வாய்கிழமை ஷாஃப்ஹவுசன் (Schafhausen) ரயில் நிலையத்தில் கத்தியுடன் தொடர்புடைய குற்றச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் லேசான காயம் அடைந்தார்.
மற்றொரு நபர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஷாஃப்ஹவுசன் ரயில் நிலையத்தில் பலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்களில் ஒருவரை 19 வயது இளைஞன் கத்தியைக் காட்டி மிரட்டினான்.
பின்னர் பேரூந்தில் காத்திருந்த அவர் பேருந்தை விட்டு வெளியேறியதும், குறித்த 19 வயது இளைஞனை வழிப்போக்கர்கள் நிராயுதபாணியாக்கி தரையில் தள்ளினார்.
பின்னர் ஷாஃப்ஹவுசன் காவல்துறையின் எச்சரிக்கை ரோந்து மூலம் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் அவ்வழியாகச் சென்றவர்களில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால், அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின் போது, தாக்குதல் நடத்தியவர் மது, மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.