விபத்து காரணமாக லுகார்ன்னோவில் போக்குவரத்து நெரிசல்.!!
சுவிட்சர்லாந்தின் லுகார்ன்னோ மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களுக்காக செவ்வாய்க்கிழமை மாலை (ஜூலை 2, 2025) மிகுந்த சிரமங்களை உருவாக்கும் நிலை உருவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லுகார்ன்னோ விமான நிலையம் மற்றும் தெனேரோ (Tenero) இடையே ஆச்கோனா (Ascona) நோக்கிச் செல்லும் முக்கிய சாலை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை சுவிட்சர்லாந்தின் வாகன ஓட்டுநர்களுக்கான உதவித் தகவல் மையமான TCS (Touring Club Schweiz) உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தில் போலீசார் சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் ஒரு வழிப்பாதை மட்டுமே அனுமதிக்கப்பட்டமையால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிக மெதுவாக பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் அந்த பாதையை தவிர்த்து மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு மற்றும் போக்குவரத்து சீராகும் வரை சகிப்புத் தன்மையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
@ டிசினோ நியூஸ்