வின்டர்தூரில் மனைவியை கொரூரமாக தாக்கிய கணவன் கைது சூரிச் கன்டோன் வின்டர்தூரில் இல் சனிக்கிழமை இரவு திருமணமான தம்பதியினரிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
ஞாயிற்றுக்கிழமை இரவு வின்டர்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது முதியவர் ஒருவர் தனது மனைவியை உடல்ரீதியாக தாக்கி அவருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சூரிச் கன்டோனல் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிப்போகவே 65 வயதான தனது துணைவியை அவரது 73 வயது கணவர் கொடுரமாக தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தின் பின்னணி தொடர்பாக போலீசார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.