வலைஸ் கன்டோனில் நீச்சலுக்கு சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி.!!
ஜூன் 22, 2025, ஞாயிற்றுக்கிழமை மாலை, சுவிட்சர்லாந்தின் வலைஸ் (Valais) மாநிலத்தில் உள்ள சிட்டன் (Sitten) நகர் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் நீச்சலுக்கு சென்ற 22 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் சுமார் இரவு 8 மணிக்கு நடைபெற, அப்பகுதியில் இருந்த ஒருவர் உடனடியாக மீட்புப் படைகளைத் தொடர்பு கொண்டார். தகவல் கிடைத்தவுடன் வலைஸ் கன்டோன் காவல் துறை, வலைஸ் மாநில நீர்மூழ்கும் மீட்புக்குழு மற்றும் சிட்டன் நகரத் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இரவு 9:30 மணியளவில், நீர்மூழ்கும் படையினர் தேடுதல் பணியின் போது இளைஞரின் சடலத்தை கண்டுபிடித்து நீரிலிருந்து மீட்டனர். உயிரிழந்தவர் செர்பியாவைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போதைக்கு அவர் நீரில் மூழ்கிய காரணம் சரியாக தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வலைஸ் மாநில அரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய வெப்பச் சூழ்நிலையில், பொதுமக்கள் நீச்சலுக்குச் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டுள்ளனர்.
@Kapo VS