லௌசானில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தேர்ர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு லௌசான் மேற்கில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த 19 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரம், இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3 ஆக அதிகரித்துள்ளது.
READ ALSO THIS :_ஷாப்பிங் சென்டரின் கட்டுமானப்பணி விபத்து : இருவர் உயிரிழப்பு
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குறைந்தது 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பலர், சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும், நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக இன்னும் இறுதியான தீர்மானத்துக்கு வரவில்லை என்று வோட் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், 4 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மூலம் – zueritoday