லுசேர்ன்னில் வினோதம் : Uber சவாரி நிறுவனம் வெளியிட்ட தகவல்..!! சுவிட்சர்லாந்தின் 2024 ஆம் ஆண்டின் மிகவும் ஆச்சரியமான சவாரிகளில் சிலவற்றை Uber வெளிப்படுத்தியுள்ளது. லூசெர்னில் மிகவும் வேடிக்கையான சவாரி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு ஒரு நபர் Uber ஐப் பயணம் செய்யத் தேர்ந்தெடுத்தார், அது வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடக்கக்கூடிய தூரத்திற்காக அங்கு Uber ஐ அழைத்திருந்தமை வேடிக்கையாக இருந்தது.
மாண்டரின் ஓரியண்டல் பேலஸ் ஹோட்டலில் இருந்து அருகிலுள்ள கிராண்ட் ஹோட்டல் ஐரோப்பாவிற்கு 529 மீட்டர் தொலைவில் செல்ல அவர் Uber சவாரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். 529 மீட்டர் தூரம் என்பது சாதாரணமாக நடந்து செல்லக்கூடிய தூரமே. அது மாத்திரமின்றி அப்பகுதியில் அடிக்கடி ட்ராம் சேவைகளும் பேரூந்து சேவைகளும் பணியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இது இந்த ஆண்டின் குறுகிய சவாரி அல்ல. சூரிச்சில், ஒருவர் வெறும் 431 மீட்டருக்கு (சுமார் மூன்று நிமிடங்கள் நடந்து) Uber சவாரிக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.