லுசேர்ன்னில் பற்றிய எரிந்த வாகன நிறுத்துமிடம்..!! லூசர்னில் ஒரு வாகன தரிப்பிடம் ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் தீ பரவியதாக கிடைத்த தகவலை அடுத்து தீயணைப்பு துறையினர் வந்து பார்த்தபோதுஇ தங்குமிடம் எரிந்து கொண்டிருந்தது.
(c) Kapo LU
லுசேரன் பொலிசார் அறிவித்தபடி, தீயானது வீட்டிற்கு பரவாமல் தீயணைப்பு படையினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகன காப்பகம் முற்றிலும் சேதமடைந்துள்ளதோடு. பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்புள்ள பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.