ரைன் நதியில் சிக்கிய 54 வயதான நபர் உயிருடன் மீட்பு.!!! ரைன் நதியில் நடந்த நீச்சல் விபத்து ஒன்றில் தெய்வாதீனமாக ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஒரு நபர் தண்ணீரில் இருந்து வெளியேற முடியவில்லை என குடியிருப்பாளர் ஒருவரின் முறைப்பாட்டை அடுத்தே குறித்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் . அவர் ரைனாவ் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் நீரில் சிக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் – வியாழன் காலை 8 மணிக்கு சற்று முன், நோல்லில் வசிக்கும் ஒருவர் ஷாஃப்ஹவுசென் பொலிசாருக்கு, 45 நிமிடங்களுக்கு முன்னர் ரைன் நதிக்கரையை நோக்கி ஒரு மனிதன் நடந்து செல்வதையும், பின்னர் தண்ணீரில் குதித்திருப்பதையும் தான் அவதானித்ததாக தகவல் கொடுத்தார்.

அந்த நபர் திரும்பி வராதபோது, அவரது உடைகள் மற்றும் காலணிகள் கரையில் இருப்பதைக் கண்டு, அவர் அவசர போலீசாரின் இலக்கத்திற்கு அழைப்புவிடுத்தார்.
சுமார் ஒரு மணிநேரம் நீடித்த தேடுதலுக்குப் பிறகு, தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் தண்ணீரில் புதைந்து கிடந்த நபரை உயிருடன் கண்டுபிடித்தனர். 54 வயதான அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தண்ணீரில் இருந்திருக்கலாம் என மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர். சூரிச் கன்டோனல் போலீசார், வெய்ன்லேண்ட் தீயணைப்பு துறையின் நீர் மீட்பு சேவை, ஷாஃப்ஹவுசன் போலீசார் மற்றும் வின்டர்தூர் மீட்பு சேவை ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டன. (c) zueritoday