மத்திய கிழக்கில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு சுவிஸ் வலியுறுத்து மத்திய கிழக்கு மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு சுவிட்சர்லாந்து வலியுறுத்துகிறது.
இது அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை (FDFA) ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர்) இல் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளது.
நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்துள்ளது.
இதே வேளை இன்று ஞாயிற்றுக்கிழமை, லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது திட்டமிட்ட பழிவாங்கும் தாக்குதலை நடத்தியதாக அறிவித்தனர்.

ஈரானிய ஆதரவு ஷியா குழு அதிகாலையில் இஸ்ரேல் மீது 320 ராக்கெட்டுகளை வீசியதாகக் கூறியது. லெபனானில் இருந்து சுமார் 200 ராக்கெட்டுகள் மற்றும் 20 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாகவும், பலவற்றை இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு மூலம் இடைமறித்ததாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பதிலுக்கு இஸ்ரேலின் இராணுவம் தெற்கு லெபனானில் பல இலக்குகளை தாக்கியது. ஹெஸ்புல்லா நிலைகளுக்கு எதிரான தாக்குதலில் சுமார் 100 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இரு தரப்பிலிருந்தும் இந்த கூற்றுக்கள் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..