போலீசாருக்கு தண்ணிகாட்டிய நபர் : முட்டுச்சந்தியில் சிக்கினார்.!!
நேற்று செவ்வாய்க்கிழமை அன்று போலீசார் சோதனை செய்ய முற்பட்ட போது காரை நிறுத்தாமல் சென்ற ஒரு நபரை சென்ட்காலன் கன்டோனல் போலீசார் துரத்திப்பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் சென்ட்காலன் கோசாவ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்கிழமை காலை 10 மணிக்குப் பிறகு, 69 வயதான ஓட்டுநர் ஒருவரை கோசாவில் வைத்து போலீஸ் சோதனை செய்ய விரும்பினர்
கன்டோனல் காவல் துறையின் ரோந்துப் பணியாளர் ‘ஸ்டாப் போலீஸ்’ என்ற காட்சியுடன் குறித்த காரின் முன் நிறுத்தி போலீஸ் அதிகாரி ஒருவர் வெளியே வந்ததும், அந்த நபர் திடீரென காரை ஓட்டிச் சென்றார்.
இதனை தொடர்ந்துர் ரோந்துப் படையினர் தப்பியோடிய காரை பல்வெறு வீதிகளினூடாகவும் பின்தொடர்ந்து குறித்த நபரை துரத்திச்சென்றுள்ளனர். இறுதியில் பாதசாரிகள் பாதையூடாக பயணித்த குறித்த நபர் ஒரு முட்டுச்சந்தில் தனது காரை நிறுத்த வேண்டியிருந்தது. இறுதியில் போலீசாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் 69 வயதான சுவிஸ் ஓட்டுநர் எனவும் அவரது ஓட்டுனர் உரிமம் பல ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பல்வேறு மீறல்களுக்காக அவர் சென்ட்காலன் மாகாணத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.