பாலஸ்தீனம் மற்றும் லெபனானுக்காக ஆதரவாக சூரிச்சில் ஆர்ப்பாட்டம் சூரிச்சில் இன்று சனிக்கிழமை பிற்பகல் பாலஸ்தீனம் மற்றும் லெபனானுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் ஒரு வருடத்திற்கும் மேலாக காசாவில் பாலஸ்தீனிய மக்களை படுகொலை செய்து வருகிறது, இப்போது இந்த “உயிர்க்கு எதிரான வன்முறையை ” லெபனானுக்கு விரிவுபடுத்துகிறது என ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாலஸ்தீன கமிட்டி விமர்சித்துள்ளது.
“பாலஸ்தீன மக்களின் உறுதிப்பாட்டின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், தெருக்களில் மீண்டும் மீண்டும் குரல் எழுப்புவோம்” என்று ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்திற்கான அழைப்புகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த அழைப்பைப் பின்தொடர்ந்தனர் – கீஸ்டோன் SDA நிருபரின் மதிப்பீட்டின்படி, ஹெல்வெட்டியா ப்ளாட்ஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம் கலந்துகொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் கொடிகளையும், “பாலஸ்தீனத்திற்கான சுதந்திரம்” மற்றும் “இனப்படுகொலையை நிறுத்து” போன்ற சுவரொட்டிகளையும் ஏந்தியிருந்தனர்.
“அரபு உலகின் எதிர்காலம் இந்த தருணத்தில் தங்கியுள்ளது” என்று பாலஸ்தீன கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கூட்டத்தினரிடம் கூச்சலிட்டார். காசா பகுதி அழிக்கப்படும். “இதை எதிர்ப்பதே எங்கள் வேலை” என்று செய்தித் தொடர்பாளரிடம் அவர் கருத்து தெரிவித்தார்.
நன்றி : வாட்சன் இணையம் /SDA