பாசலில் விலையுயர்ந்த கார் திருட்டு : கொள்ளையன் மீது துப்பாக்கிச்சூடு
ஜூலை 1, 2025, அதிகாலை 2.30 மணிக்கு கன்டோன் Basel லில் உள்ள புக்க்டென் (Buckten ) நகரில் உள்ள மைய வீதியில் அமைந்துள்ள ஒரு காராஜில் திருடர்கள் நுழைந்து விலையுயர்ந்த கார் ஒன்றை திருடிய சம்பவம் இடம்பபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நேரடியாக சம்பந்தம் இல்லாத ஒருவர், Basel-Landschaft காவல்துறையின் அவசர அழைப்பு மையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

திருடர்கள் கராஜில் நுழைந்து, அங்கு இருந்த பச்சை நிற லாம்பொர்கினி (Lamborghini) காரை திருடிக் கொண்டு, A2 எனும் மோட்டார் வழியாக தப்பி ஓடினர். போலீசாரும் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, ஒரு கட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றது.
மேலும், அந்தக் காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர், பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் 21 வயதான பிரான்சைச் சேர்ந்த நபராகும். இந்த சம்பவம் தொடர்பாக Basel-Landschaft மாநிலத்தின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அதே நேரத்தில், போலீசார் துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாகவும் தனிப்பட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.