தீவிரவாத நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு இஸ்லாமிய அரசுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு உதவியதாகவும் சந்தேகிக்கப்பட்டு ஷாஃப்ஹவுசெனில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் 15 மற்றும் 16 வயதுடைய டீன் ஏஜ் இளைஞர்கள். முக்கியமாக அவர்கள் சிறார்களாக இருப்பதால், ஷாஃப்ஹவுசென் மாகாணத்தில் உள்ள போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
மேலும் இவர்களுடைய 18 வயதுடைய சந்தேகத்திற்குரிய கூட்டாளி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் காவல் நிலையங்கள் மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து ஆலோசித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.