தரவரிசையில் பின்தள்ளப்பட்ட சுவிட்சர்லாந்து உலக சுற்றுலா தரவரிசையில் சுவிட்சர்லாந்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார மன்றத்தின் சுற்றுலா போட்டித்திறன் தரவரிசையில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2021 இல் ஆறாவது இடத்தில் இருந்து, தற்போது 10 வது இடத்திற்கு பின்வாங்கியுள்ளது. எனினும் இன்னும் நல்ல நிலையில் உள்ளதாகவே அறியப்படுகிறது. எனெனில் குறித்த தரவரிசையில் சுமார் 119 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வணிக சூழல், தொழிலாளர் சந்தை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற விடயங்களில் சுவிட்சர்லாந்து முன்னணியில் உள்ளது.
மறுபுறம், சுவிட்சர்லாந்து ஒரு விலையுயர்ந்த இடமாக கருதப்படுவதாகவும் குறித்த தரவரிசையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.