ஜேர்மன் – சுவிஸ் எல்லையில் ஒரு தீவிர சம்பவம் நடந்துள்ளது. 19 வயது இளைஞன் தனது சகோதரனையும் பெற்றோரையும் கத்தியால் குத்தி கொன்றதுடன்இ தனது சகோதரியையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
குறித்த கொடூரமான சம்பவம் ஜேர்மன் – சுவிஸ் எல்லையில் உள்ள ஹோஹென்டென்கெனில் நடந்துள்ளது. 19 வயதான அவர் தனது 58 மற்றும் 61 வயதான பெற்றோரை கத்தியால் குத்தி கொன்றார். பின்னர் அவரது 34 வயது சகோதரரையும் கொலை செய்துள்ளார்.
இறுதியாக சகோதரியினையும் கொலை செய்யும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளார். இச்சம்பவத்தில் சகோதரிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவரது உயிருக்கு ஆபத் எதுவும் இல்லை என தெரவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழந்ததியுள்ளது.