செம்மறி ஆடுகளை வேலைக்கு அமர்த்தும் சுவிஸ் மாகாணம் சுவிட்சர்லாந்தின் தொழிலாளர் சந்தையில் பல ஆண்டுகளாக தகுதிவாய்ந்த பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆனால் கன்டோன் சூரிச்சில் உள்ள வின்டர்தூர் நகரம் இந்த பற்றாக்குறையை தீர்க்க ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளது.
சமூகத்தில் புல்வெளிகளை வெட்டுவதற்கு மனிதர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பதிலாக, வின்டர்தூர் நகரம் செம்மறி ஆடுகளுக்கு இந்த பணியை வழங்க தீர்மானித்துள்ளது.

வின்டர்தூர் நகரத்தின் தலைமை சூழலியல் நிபுணர் மைக்கேல் வைஸ்னர் கூறுகையில் தற்போது காடுகளுக்கு அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் இவர்களை பணிக்கு அமர்த்துவது சிறந்த யோசனை என தெரிவிக்கிறார்.
‘இதன் மூலம் ஒரு நேர்மறையான விளைவு உறுதிப்படுத்தப்பட்டால், நாங்கள் கூடுதல் செம்மறி ஆடுகளை வேலைக்கு வைக்கலாம்இ எனவும் வைஸ்னர் மேலும் குறிப்பிட்டார்.