சென்ட்கேலனில் போதைப்பொருள் மற்றும் கத்தியுடன் தப்போயடி இளைஞன் கைது
செயிண்ட் கேலன் நகர காவல்துறையின் ஒரு சிவிலியன் ரோந்துப் பணியாளர் சந்தேகத்திற்கு இடமான இருவரை சோதனை செய்ய முற்பட்ட போது ஒருவர் தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வியாழக்கிழமை மாலை சுமார் 9 மணியளவில், (Rosenbergpärkli) ரோசன்பெர்க்பார்க்லியில் இடம்பெற்றுள்ளது.
தப்பியோடிய 18 வயது இளைஞனை மற்றொரு போலீஸ் ரோந்துப் பிரிவின் உதவியுடன், சிறிது நேரத்திலேயே பூங்காவில் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறை கைது செய்தது.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது, போலீசார் சுமார் இரண்டு கிராம் கோகைன் மற்றும் ஒரு கத்தியைக் கண்டுபிடித்தனர், அது சட்டப்பூர்வமானது என்றாலும், அந்த நபர் அதை ஏன் எடுத்துச் சென்றார் என்பதற்கான உறுதியான விளக்கத்தை அளிக்க முடியவில்லை. எனவே கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
போஸ்னிய குடிமகனான அந்த இளைஞன், இப்போது அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பியமைக்காகவும், போதைப்பொருள் சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
Kapo SG