சென்ட்காலன் கன்டோனில் Rorschacherberg, Erlenstrasse இல் உள்ள வீட்டுக்குள் திருடர்கள் கைவரிசை .! சனிக்கிழமை (01/14/2023), மாலை 6:20 மணி முதல் இரவு 8:30 மணி வரை, அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் Erlenstrasse இல் உள்ள ஒரு குடும்ப வீட்டிற்குள் நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சென்ட்காலன் கன்டோனில் Rorschacherberg இல் உள்ள வீட்டுக்குள் திருடர்கள் கைவரிசை.!
சென்ட்காலன் கன்டோனில் உள்ள ஒரு வீட்டிலையே இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டுக்குள் ஒரு கதவு வழியாக வலுக்கட்டாயமாக நுழைந்த திருடர்கள் வீடு முழுவதும் சோதனையிட்டு பல ஆயிரம் பிராங்குகள் மதிப்புள்ள பணம், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
சென்ட்காலன் கன்டோனில் Rorschacherberg இல் உள்ள வீட்டுக்குள் திருடர்கள் கைவரிசை.!
இச்சம்பவத்தின் பொருள் சேதம் பல ஆயிரம் பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.