சென்ட்காலன் கன்டோனில் திருட்டு : பணம் நகை கொள்ளை.!! சென்ட்காலன் கன்டோன் அப்ட்வில் பகுதியில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சோனன்பேர்க்திராசவில் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றில் கதவினை உடைத்து உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த வீட்டில் உள்ள பணம் மற்றும் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சுமார் 3000 பிராங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கன்டோனல் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றவாளி இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.