சூரிச் விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் அமெரிக்கபெண் கைது இன்று செவ்வாயன்று, சுவிஸ் அதிகாரிகள் சூரிச் விமான நிலையத்தில் பல கிலோகிராம் கெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நியூயார்க்கிற்குச் செல்ல விரும்பிய 27 வயது அமெரிக்கப் பெண், சூரிச் கன்டோனல் காவல்துறையினரால் வாயிலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்து பெண் ஹம்பர்க்கில் இருந்து வந்தவர் எனவும் அவரது ஒரு சூட்கேஸில் போதைப்பொருள் கண்டெடுக்கப்ட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவிஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான சுவிஸ் அலுவலகம் வழக்கமான சோதனையில் 15 கிலோ வெள்ளைப் பொடியைக் கண்டுபிடித்தது. சோதனைக்குப் பிறகு, அது கெட்டமைன் என உறுதி செய்யப்பட்டது என்று சூரிச் கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.
அவர் போதைப்பொருள் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படுகிறது மற்றும் விசாரணைக்குப் பிறகு அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதே வேளை கடந்த வாரம் மேலும் இரு நபர்கள் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சூரிச் விமானநிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பட ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்
அதில் ஒருவர் 56 வயதான டச்சுக்காரர். அவர் தனது பயணப் பையில் சுமார் 65 கிலோகிராம் கஞ்சாவுடன் பயணம் செய்தார்.
மற்றையவர் 27 வயதான மலேசிய ஆண். அவர் தலா 47 கிலோகிராம் கஞ்சாவை இரண்டு சூட்கேஸ்களில் எடுத்துச் சென்றனர்.
தற்போது மூன்றாவது நபராகவும் ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஐரோப்பிய சுற்றுலாவை திட்டமிட்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Credit (c) zueritoday, பட ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்