சூரிச் விமான நிலையத்தில் முதலை தலையுடன் ஒருவர் கைது..!! சூரிச் விமான நிலையத்தில், மத்திய சுங்க அலுவலக ஊழியர்கள், அழிந்து வரும் முதலை இனம் ஒன்றின் தலையை கைப்பற்றியுள்ளனர்.
பாங்காக்கிலிருந்து வந்த ஒருவரின் பொதிகளில்இ அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட அளவுகளில் பல்வேறு பொருட்களையும் அவர்கள் கண்டறிந்தனர்.
அந்த நபர் சூரிச் கன்டோனல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் கடந்த செவ்வாயன்று அறிவித்தது.

அவரது பொதிகளில் ஐந்து கத்திகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றில் இரண்டு சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமானது என்று தெரியவந்தது. இது மாத்திரமின்றி அதிகாரிகள் இரண்டு போலி பிராண்ட் கடிகாரங்களையும் கண்டுபிடித்தனர்.
வர்த்தக முத்திரை உரிமையாளரின் வேண்டுகோளின் பேரில் சட்டவிரோத கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றும் கடிகாரங்கள் அழிக்கப்பட்டன. முதலை தலை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டது.
அந்த நபர் டிசம்பர் 2024 இல் கைது செய்யப்பட்டார். ஆனால் மத்திய சுங்க அலுவலகம் இதை இப்போது வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
BAZG/PD (C)