சூரிச் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் 2024 இல் கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
2019 ம: ஆண்டின் நெருக்கடிக்கு முந்தைய நிலை கிட்டத்தட்ட மீண்டும் எட்டப்பட்டுள்ளது. ஆகஸ்டில் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய விமான நிலையமான சூரிச் விமானநிலையம் வழியாக மொத்தம் 3.10 மில்லியன் மக்கள் பயணம் செய்ததாக சூரிச் விமான நிலையம் இன்று புதன்கிழமை மாலை அறிவித்தது.

இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 6.0 சதவீதம் அதிகமாகும். இந்த பயணிகளில், 2.14 மில்லியன் பேர் சூரிச்சிலிருந்து புறப்பட்டும் அல்லது வந்து சேர்ந்த உள்ளூர் பயணிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு வெளியூர் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.