சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பயங்கர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு கார்கள் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காலை 9 மணிக்குப் பிறகு 24 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச்சென்ற காரே 28 வயதுடைய நபர் ஓட்டிச்சென்ற இன்னுமொரு காருடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தினை ஏற்படுத்தியவரின் கார் வீதியை விட்டு விலக மரத்துடன் மோதி பலத்த சேதங்களுக்கு உள்ளானதோடு குறித்த நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் கெலிகொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிக்கிய மற்றைய காரில் பயணித்த பயணி உட்பட ஓட்டுனருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இது தொடர்பில் சூரிச் கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Kantonspolizei Zürich