சூரிச் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளுக்கு பதிலாக புதிய நடமுறை சூரிச்சில், நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பாரம்பரிய மருந்துகளை விட மருத்துவர்கள் புதிய பரிந்துரைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு புதிய சோதனைத் திட்டத்தில், நடன வகுப்புகள், தோட்டக்கலை மற்றும் கடன் ஆலோசனை போன்ற செயல்பாடுகளுக்கான பரிந்துரைகளையும் அவர்கள் வழங்குவார்கள்.
2.5 மில்லியன் பிராங்குகள் செலவிலான இந்தத் திட்டத்திற்கு, சூரிச் நகர நாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

தரமான மருத்துவ சிகிச்சைகள் மூலம் முன்னேற்றம் காணாத நோயாளிகளுக்கு இந்த சேவைகள் உதவக்கூடும் என்று பெரும்பான்மையான பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடுதல் ஆதரவை வழங்குவதே குறிக்கோள் இதன் குறிக்கோள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..