சூரிச் பாரியளவு நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயம் சுவிட்சர்லாந்தின் பணக்கார நகரங்களில் ஒன்றான சூரிச் 2025 இல் ஒரு பெரிய நிதி பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
226.2 மில்லியன் பிராங்குகள் இழப்பு ஏற்படும் என்று நகரத்தின் நிதி இயக்குனர் டேனியல் லியூபி தெரிவித்தார். கடந்த காலங்களில் அடிக்கடி லாபம் ஈட்டிய செல்வம் நிறைந்த நகரமான சூரிச்சிற்கு இது அசாதாரணமானது.
முந்தைய ஆண்டுகளில், சூரிச் அதன் வரவுசெலவுத் திட்டமானது, இழப்புகளை எதிர்பார்த்திருந்தும் 2023 இல் நகரம் 230 மில்லியன் பிராங்குகளுக்கு மேல் வருமானத்தை ஈட்டியிருந்தது.
வரவிருக்கும் ஆண்டுகளில் நகரம் அதிக பற்றாக்குறையை சந்திக்கும் என்று லியூபி இப்போது எச்சரித்துள்ளார். நஷ்டத்திற்கு முக்கிய காரணமாக அதிகரித்து வரும் செலவீனங்கள் குறிப்பிடப்படுகிறது.

அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கையாளவும், குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்தவும், ஆசிரியர்கள் உட்பட, அதிகமான நகராட்சி ஊழியர்களை சூரிச் பணியமர்த்துகிறது.
நகரசபையானது முனிசிபல் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் வாழ்க்கைச் செலவு சரிசெய்தல்களுக்காக 40 மில்லியன் பிராங்குகளுக்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அதிகரித்த செலவுகள் நகரின் நிதிநிலையில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது திட்டமிடப்பட்ட பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக வலுவான நிதி நிலையைக் கொண்டிருந்த ஜூரிச், இப்போது வரும் ஆண்டுகளில் சூரிச் தனது பட்ஜெட்டை எவ்வாறு சமன் செய்யும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.