சூரிச் குடியிருப்பாளர்களில் 40 சதவீதம் பேர் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
2023இல், சூரிச்சில் மொத்தம் 2,950 பேர் சுவிஸ் குடியுரிமை பெற்றுளளனர். அவர்களில் 40 சதவீதம் பேர் ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள் என அந்நகரம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்ற பெரும்பாலான வெளிநாட்டவர்கள் ஜேர்மனியர்கள் என்பதைக் காட்டும் தேசிய தரவுகளுடன் இது ஒத்துப்போவதாக இருக்கிறது.
மேலும் சூரிச்சில் வசிப்பவர்களில், ஜெர்மனியர்களுக்கு அடுத்ததாக இத்தாலியர்கள், மற்றும் அதைத் தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் மக்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.