சூரிச்சில் உள்ள ஒப்ஃபெல்டனில், அடையாளம் தெரியாத, வெள்ளை வானில் வந்தவர்கள் ஒரு மாணவனை கடத்த முயற்சி செய்துள்ளதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தி பரவி வருகின்றது.
உண்மையில் இச்சம்பவம் சூரிச் மாகாணத்தில் உள்ள ஒப்ஃபெல்டனில் வியாழன் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாணவர் ஒருவரை அணுகினார். ஆனால் அந்த சிறுவன் சாதூரியமாக செயற்பட்டு உடனடியாக மீண்டும் பாடசாலைக்கு ஓடிச்சென்று உதவி கேட்டதாக தெரிவிக்கப்படுகுறது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற வழக்குகள் சமீபகாலமாக பரவி வருகின்றன. உதாரணமாக,வின்டர்தூர் நகரத்திலும் இவ்வாறான வழக்குகள் பதிவாகியுள்ளன.
பணத்தை காட்டி பாடசாலை சிறுவர்களை கடத்து முயற்சி இடம்பெற்றுள்ளது. இம்முறை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குழந்தையை கடத்த முயன்ற வேனில் உள்ளே இருக்கையில் குழந்தைகளை கவருவதற்காக பொம்மை வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது