கன்டோன் சூரிச்சில் அமைந்துள்ள உற்றிக்கோன் அம் சே (Uetikon am See) பகுதியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக சூரிச் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர். 63 வயதான ஓட்டுனர் ஒருவர் தனது காரின் மனடோர்ப் (Mannedor) நோக்கி பயணித்த போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலையே மரணமடைந்துள்ளார். விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து கன்டோனல் போலீசார் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.