சூரிச்சில் பொது இடத்தில் 19 வயது இளம் பெண் மீது பாலியல் பலாத்காரம்!! சூரிச் மெயின் ஸ்டேஷன் அருகே சனிக்கிழமை மாலை 19 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளாதாக சூரிச் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
நேற்று செவ்வாயன்று சூரிச் நகர காவல்துறை அறிவித்தபடிஇ சனிக்கிழமை இரவு சுமார் 11:20 அளவில் Bahnhofplatz ன் பகுதியில் உள்ள சூரிச் சென்ட்ரல் ஸ்டேஷன் முன் ஒரு பெஞ்சில் 19 வயது ஜெர்மானிய பெண் அமர்ந்திருந்தார். குறித்த பெண்ணை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அணுகியுள்ளார்.

பின்னர் குறித்த பெண்ணை அப்பகுதியில் உணவகத்தின் மூடப்பட்ட நுழைவாயில் பகுதிக்கு இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் குற்றவாளி தப்பியோடியுள்ளார்.
குற்றவாளி தொடர்பான சாட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சூரிச் நகர காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
News (c) Keystone-SDA