சூரிச்சில் நள்ளிரவுக்கு பின்னர் ஏற்பட்ட தீ விபத்து : 50 பேர் வெளியேற்றம் சூரிச்சின் குளோட்டனில் நேற்று நள்ளிரவுக்கு பின்னர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சமையலறை தீப்பித்தமையினால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாலை 1.30 மணியளவில் குளோட்டனில் உள்ள சப்கவுசர் திறாசவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள குடியிருப்பில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சூரிச் கன்டோனல் காவல்துறையின் கூற்றுப்படி, சுமார் 50 ற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 55 வயதுடைய நபருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவசர சேவை மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
சூரிச் கன்டோனல் போலீசார் அந்த இடத்தில் நேர்காணல்களை நடத்தி, ஆதாரங்களை பாதுகாத்து தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கத் தொடங்கினர்
பல்லாயிரக்கணக்கான பிராங்குகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 3 மணிக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குத் திரும்ப முடிந்ததாகவும் கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.
ZuerichToday (c)