சூரிச்சில் நகைக்கடை மீது காரை மோதி கொள்ளையர்கள் கைவரிசை.!!
2025 ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை சுமார் 5:30 மணியளவில் சூரிச் நகரின் புகழ்பெற்ற Bahnhofstrasse பகுதியில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் அதிரடி, கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின் படி, கொள்ளையர்கள் ஒரு காரைப் பயன்படுத்தி கடையின் பாதுகாப்புடன் உள்ள முன் கதவை மோதி உடைத்துள்ளனர். பின்னர் அவர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளையிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்தவுடன், அவசர அழைப்பு மையத்திற்கு வந்த தகவலின் பேரில், சூரிச் நகர்ப்போலீசார் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் கொள்ளையர்கள் ஏற்கனவே கடையை விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவத்தில் சிகப்பான Alfa Romeo Stelvio என்ற வாகனம் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது. அதைப் பற்றிய தகவல்கள் இருந்தால், பொதுமக்கள் போலீசாரை உடனடியாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சம்பவ இடத்தில் தடயங்களைப் பாதுகாப்பதற்காக சூரிச் நீதிமன்ற தடயவியல் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணைகள் சூரிச் நகர்ப்போலீசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
@Kapo ZH