சூரிச்சில் தீப்பற்றி எரிந்த போலீசாரின் வாகனம் செவ்வாய்கிழமை மாலை சூரிச்சில் உள்ள டிராம் நிறுத்தம் அருகே போலீஸ் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுவிட்சர்லாந்தின் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்விடத்தில் நின்றவர்கள் கொடுத்த தகவலை அடுத்து ஊடகங்கள் போலீசாரிடம் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுமக்களால் எடுக்கப்பட்ட காணொளியும் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
(c) 20min.ch(c) 20min.ch
அதில் பற்றி எரியும் போலீசாரின் வாகனத்தின் அருகில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
சூரிச் நகர காவல்துறை இச்சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை எதனையும் உடனடியாக வழங்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.