சூரிச்சில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : ஒருவர் காயம் ஒருவர் கைது.! ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மாவட்டம் 3 இல் இருவருக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதோடு ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குப் பிறகு, காயமடைந்த 41 வயது நபர் சூரிச்சில் உள்ள மாவட்ட 3 இல் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, அவர் முன்பு Staffelstrasse (ஸ்டாஃபெல்ஸ்ட்ராஸ்ஸில்) மற்றொரு நபரால் வெட்டு ஆயுதத்தால் காயமடைந்தார்.

இதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய குற்றவாளி, குற்றம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு சூரிச் கன்டோனல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர 45 வயதான இத்தாலியர் என தெரிவிக்கப்படுகிறது..
சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாவில்லை.. ஒரு விரிவான தடயவியல் விசாரணையை மேற்கொள்ள சூரிச் தடயவியல் நிறுவனத்தில் இருந்து நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்.
தீவிர வன்முறைக் குற்றத்துக்கான அரசு வழக்கறிஞர் அலுவலகம் I மற்றும் சூரிச் கண்டோனல் காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: sda