சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூரிச்சின் டியல்ஸ்டெர்ப் பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பெண்களை சூரிச் கான்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கியுடன் பேக்கரி ஒன்றிற்குள் புகுந்த பெண்கள் அங்கிருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பேக்கரியின் பணியாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 மற்றும் 37 வயதான இரண்டு சுவிட்சர்லாந்து பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பெண்கள் சில நூறு சுவிஸ் பிராங்குகளை பேக்கரியிலிருந்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:- (tamilinfo)